இருமுகன் யுஏ சான்றிதழுக்கு நயன்தாராதான் காரணமா?

விக்ரம் நடிக்கும் படங்கள் என்றால் தரமான கதைகளை சுற்றித்தான் பின்னப் பட்டிருக்கும். அதோடு கதையில் தனது தனித்திறமையை வெளிப்படுத்த தேவையான விசயங்கள் இருந்தால் மட்டுமே அந்த கதைகளை டிக் செய்வார் விக்ரம்.

Iru-Mugan-new-stills

அப்படி அவர் கேட்ட பல கதைகளில் டபுள் ஓகே சொல்லி நடித்த படம்தான் இருமுகன். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் என இரண்டு நடிகைகள் நடித் துள்ளனர்.

செப்டம்பர் 9-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதையடுத்து நயன் தாரா பாடல் காட்சிகளில் அதிக கிளாமராக நடித்திருப்பார். அதனால்தான் யுஏ கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அப்படக்குழு வினரைக்கேட்டால், இருமுகனில் நயன்தாரா மிதமான கிளாமரில்தான் நடித்திருக்கிறார். படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததற்கு அவர் காரணமல்ல. ஆனால், மெடிசன் டீலிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருப்பதே இந்த சான்றிதழுக்கு காரணம் என்கிறார்கள்.

Related Posts