இருபதுக்கு – 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார்.

asia-cup_0

1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியாக இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டி அடுத்தவருடம் இருபதுக்கு-20 போட்டித் தொடராக இடம்பெறவுள்ளதாக ஆசிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 30 ஓவர்கள் நீக்கப்பட்டு இருபதுக்கு-20 போட்டிகளாக இடம்பெறவுள்ளது.

எனினும் அடுத்தவருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கு முன்னாயத்தமாகவே இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ண போட்டி இடம்பெறவிருப்பதால் 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் ஆசிய கிண்ண போட்டிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக அமையும்.

அத்துடன் ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கலைக்கப்பட்டு பொறுப்புகள் அனைத்தும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts