இருபதுக்கு இருபது தொடர் இலங்கை வசம்

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 05 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 2-1 என்றபடி அந்த தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி 05 விக்கட்டுக்களை இழந்த அந்த அணி 169 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 05 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக பிரசன்ன 37 ஓட்டங்களையும் திக்வெல்ல 68 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் டிக்வெல்ல (இலங்கை) தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts