இரா.சம்பந்தன் புதிய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேச்சுவார்த்தை

sambanthan 1_CIஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் விளக்கியுள்ளார்.

13வது திருத்தச்சட்ட விவகாரம் பற்றி ஆராய்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7ம் திகதி இலங்கை வரவுள்ளார்.

அதேவளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றய தினம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சரது விஜயத்தை முன்னிட்டு இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹாவும் நேற்றயதினம் புதுடில்லி பயணமானார்.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய உயர்ஸ்தானிகரை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளார்.

Related Posts