தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடபெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இரா. சம்பந்தனைச் சந்திப்பதும், அவரது கருத்தை செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.