இராணுவ வீரர்கள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டு கைதுசெய்யப்பட்ட இருவர் நிரபராதி என யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பூநகரி இராணுவ முகாமில் இருந்த இராணுவ சிப்பாய்கள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து, காங்கேசன்துறை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்குட்படுத்தப்பட்டது. பின்னர் இரு நபர்களும் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நேற்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நிரபராதி என யாழ். மேல் நீதிமன்றம் ஆணையாளர் கருத்திற் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.