இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது.

இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளமான டெலிகிராமில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு பெண்களின் படங்கள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பெண்கள் ரஷ்ய இராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், டெலிகிராம் பக்கத்தில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான புகைப்படங்களும் வரவேற்கப்படுகின்றன, எனினும் ஆபாச உள்ளடக்கம் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

படங்கள் குறித்து டிம் என்ற இராணுவ வீரர் கூறுகையில், “இந்த வகை பக்கங்கள் எனக்கு வீட்டை நினைவுபடுத்துகிறது. நான் இந்த சேனலைத் திறக்கும்போது, ​​நான் வீடு திரும்ப வேண்டும் என்று கனவு காண்கிறேன். எனக்காகக் காத்திருப்பவரைப் பற்றி நான் நினைக்கிறேன்” என்றார்.

Related Posts