இராணுவ வீரரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்கு!!

இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான ஆண் ஒருவராகும். இவர் ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்தவராவார்.

அத்துடன், குறித்த இராணுவ சிப்பாய்க்கும், பிக்குவுக்கும் பேஸ்புக் வலைத் தளத்தின் மூலமே நட்பு ஏற்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக அவர்கள் இவ்வாறு பேஸ்புக் ஊடாக கருத்துக்களை பரிமாறி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர் கொத்மலை மொழி பயிற்சி மத்திய நிலையத்திற்கு பயிற்சிகளுக்காக சென்றுள்ளார்.

கடந்த 24ம் திகதி சந்தேகநபரான பிக்குவின் அழைப்பின் பேரில் இராணுவ சிப்பாய் மாதம்பை பகுதியிலுள்ள விஹாரைக்கு சென்று, அங்கு 26ம் திகதி வரை தங்கியிருந்துள்ளார்.

பின் 27ம் திகதி அவர் மீளவும் பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வைத்தியசாலையினர் வழங்கிய தகவலுக்கு அமைய, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபரான பிக்கு மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு அவரை, சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts