வவுனியா ஓமந்தைப் பகுதியில் இராணுவ வாகனத்துடன், வான் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றி வந்த வான், ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, வேகமாக வந்த இராணுவ வாகனம் மோதியதால் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.