இராணுவ வாகனம் மோதி கிளிநொச்சியில் மூவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முருகானந்தநகர் பழைய சேர்ந்த 30 வயதுடைய பெருமாள் ஜேக்குமார், மாசர் பளை சேர்ந்த 31 வயதுடைய குணரத்தினம் குகதாஸ் ,சுழிபுரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய சிவபாலன் ரதீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளானர்

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்

Related Posts