கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலிருப்பவர்களுக்கான அறிவித்தல்
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக நேற்று அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.