513 வது படைப் பிரிவினரினால் பாவனையில் வைக்கப்பட்டு இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மானிப்பாய் இராஜகாரியர் வீதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் படைகளின் கட்டளை அதிகாரி கேணல் சரத் அமரசிங்க கலந்து கொண்டதுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் மற்றும் கிராம அலுவலர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட வீடுகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டார்கள்.