இராணுவப் பிரசன்னம் சிவில் நிர்வாகத்துக்கு தடை – பொ. ஐங்கரநேசன்.

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும் வரை சிவில் நிர்வாகத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக கிட்டுப்பூங்கா உட்பட அனைத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண விவசாய அமைச்சர்
பொ. ஐங்கரநேசன்.

inkara-nesan

வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை வரவேற்கும் முகமாக நல்லூர் பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. எமது இளம் சிறார்களுக்கு மனநிறைவான பயிற்சியை பொழுதுபோக்கைக் கொடுக்கவல்லதாக கிட்டுப் பூங்கா உள்ளது.

அதனை விடுதலைப்புலிகள் முன்னர் பயன்படுத்தினர் என்பதற்காக அது உட்பட வன்னியில் கூட புலிகளின் பயன்பாட்டில் இருந்த இடங்களை கையகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.இத்தகைய சுயநலன்களுக்காக இயற்கைச் சூழல்களை அழிப்பதை ஏற்கமுடியாது.

பழைய பூங்காவில் அரச அதிபருக்கு மட்டும் தங்குமிடம் அமைக்க முடியுமாக இருந்தது. ஆனால் ஏனைய மரங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து ஆளுநர் தனக்கு அலுவலக தங்குமிடமும் அமைத்து இயற்கை வளத்தை அழித்து விட்டார். அந்தப் பூங்காவில் முன்னர் சூழல் சிறப்பாக இருந்தது.என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்கமாட்டோம்: கஜதீபன்

நல்லூர் கிட்டு பூங்காவை அபகரிக்க இராணுவம் முயற்சி?

Related Posts