கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார்.
நேற்றைய தினம் அமைச்சரவையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கிய பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கு வழங்கப்படவில்லை. ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அமைய முப்படையினருக்கு எதிர்வரும் காலங்களில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கியமையே நாடு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணம் என சில தரப்பினர் சுட்டிக்காட்டி வரும் நிலையில், படையினருக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டால் மேலும் அரசாங்க செலவீனங்கள் அதிகரித்து பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏற்படக் கூடுமென பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.