இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி விடுதிப் பணத்தை செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது

arrest_1இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். நகரிலுள்ள விடுதியான்றில் நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழிலுள்ள விடுதியொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபரொருவர் வந்து தங்கியுள்ளார். அதாவது விடுதியில் நான்கு நாட்களாக தங்கியிருந்த நிலையில் விடுதிக்கு நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலுத்த வேண்டியேற்பட்டது.

இந்நிலையில் குறித்த நாற்பதாயிரத்தையும் செலுத்தாமல் தப்பித்துச் செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த விடுதி காப்பாளர்கள் அவரை அணுகிய போது தான் யாரென்று தெரியுமோ என்றும் கேள்வி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தான் இராணுவத்தின் கேணல் தர உயர் அதிகாரியென்றும் தன்னிடம் பணமில்லை என்றும் கூறி தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை விடுதி காப்பாளர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவல்களின் அடிப்படையில் அங்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் யாழ். பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இராணுவ அதிகாரி என்று கூறிய சிங்களவரொருவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Related Posts