இலங்கையின் இராணுவத்தளபதிகள் மற்றும் இராணுவத்தினரின் விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் வெளிநாடொன்றில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
எமது இராணுவ வீரர்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் யாரும் தலையிட முடியாது.
எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களும், இராணுவ விடயங்களும் எமது அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும். இவை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நாமே முடிவெடுப்போம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.