இராணுவத்தினரின் சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள்

Sri_Lanka_Army_Logoபலாலி பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வியாழன் (05) மற்றும் சனி (07) ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளதாக 55 ஆவது படைப்பிரிவின் தலைமையதிகாரி அஜித் காரிய கரவண தெரிவித்தார்.

யாழ்.சிவில் அலுவலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் வியாழக்கிழமை (05) காலை 6.30 மணிக்கு மோட்டார் சைக்கிள் பவனி பலாலியில் இருந்தும், துவிச்சக்கரவண்டிப் பவனி மாவிட்டபுரத்திலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடையவுள்ளது.

இதன்போது, காங்கேசன்துறை வீதியிலுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை (07) வீடுகளில் பாவனைக்குட்படுத்தி அகற்றப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை இராணுவத்தினர் சேகரிக்கவுள்ளனர்.

பொதுமக்கள், தங்கள் வீடுகளில் அகற்றப்படவேண்டிய மேற்படி கழிவுகளை வீட்டிற்கு வெளியே பைகளில் கட்டி வைக்குமிடத்து அதனை இராணுவத்தினர் சேகரித்துச் செல்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts