கிளிநொச்சியில் வட்டக்கச்சியை சேர்ந்த புலிகள் இயக்க முன்னாள் போராளிக் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தால் புதிய வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய இராணுவத்தின் மகளிர் சேவைகள் பிரிவின் அனுசரணையுடன் இவ்வீடு அமைக்கப்பட்டது.
இரணுவத்தின் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். ரணசிங்கவின் பிரசன்னத்தில் பிரபல சிங்கள நடிகர்களான சவீதா பெரேரா – உபாலி ஜயசிங்க் தம்பதி இவ்வீட்டை முன்னாள் பெண் போராளி நாகநாதன் ஜயவதனியிடம் கையளித்தது.
கிளிநொச்சியில் கடமையாற்றுகின்ற படையினரால் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது. இதை நிர்மாணிக்கின்றமைக்கு 1.2 மில்லியன் ரூபாயை நடிகர் தம்பதி வழங்கி இருந்தது.
ஜயவதனி புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்தவர். இறுதி யுத்தத்தில் அங்கவீனம் அடைந்தவர். திருமணம் செய்த இவருக்கு 04 குழந்தைகள். இவர் யுத்தத்தின்போது புலிகளால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களை காட்டுகின்ற வகையில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆவண படத்தில் நடித்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.