முல்லைத்தீவிலுள்ள இலங்கை இராணுவம், கொழும்பு ரொட்டரி கழகத்துடன் இணைந்து முல்லைத் தீவு பிராந்தியத்தில் கால்களை இழந்த பொதுமக்களுக்கு தலா 15,000.00 ரூபா பெறுமதியான செயற்கை கால்களை வழங்கி வைத்தது.
இச் செயற்றிட்டம் கொழும்பு கெபிடல் சிட்டி ரொட்டரி கழகத்தின் அனுசரனையுடன் கொழும்பு அசரன சரண சங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக இராணுவ செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.
நந்திக்கடல் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அங்கவீனமுற்ற 25 பொதுமக்கள் மேற்படி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
ஏழு நாட்களைக் கொண்ட காலப்பகுதிக்குள் பயனாளிகளின் வீடுகளுக்கு விஜயம் செய்த நன்கொடையாளிகள் மேற்படி செயற்கை கால்களை ஒட்டுசுட்டான் 64 பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.