இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் !!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினர் சிவில் மற்றும் இராணுவ உடைகளுடன் மாணவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts