இராணுவத்தால் வடக்கில் பெண்கள் படும் அவலத்தை நாம் அறிவோம்: மாவை

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தென்னிலங்கையில் இருந்து ஆடை தொழிற்சாலைக்கு உங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்ட போதும் தாம் அதற்கு சம்மதிக்கவில்லை என அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் அழிந்து போயுள்ள தொழிற்துறைகளை மீள கட்டியெழுப்பி இங்குள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தனியார் நிறுவனங்களை போல அரசாங்கத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும், ஆகவே தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது பேசி கொண்டிருப்பதாகவும், அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts