வவுனியாவில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவக் குடியிருப்புக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்போது, ஜனாதிபதியால் எதிர்வரும் 3ஆம் திகதி வவுனியாவில் திறந்து வைக்கப்படவுள்ள இரணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி