இரவோடு இரவாக ரஷ்யா செய்துள்ள அராஜகத்தை அம்பலப்படுத்திய உக்ரைன்

உக்ரைனில் உள்ள Danube நதித்துறைமுகத்தில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா நேற்றிரவு வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்றிரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper தெரிவித்துள்ளார்.

தானியக்கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Posts