உக்ரைன் நகரங்களான ஒடிஷா மற்றும் கீவ் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ரஷ்யா 18.07.2023 நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஒடிஷாவிலுள்ள உணவு தானியக் கிடங்குகளில் தீப்பற்றியுள்ளது.
தீயை அணைக்க தீயணைப்புவீரர்கள் போராடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரான Andriy Yermak, இந்த தாக்குதல், உலகின் தெற்கு பகுதியிலுள்ள மக்கள் பட்டினி கிடப்பதையே ரஷ்யா விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யா உணவு தானியக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் அகதிகள் பிரச்சினையை உருவாக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன-ரஷ்ய போரில், பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்கள் விநியோகித்து வந்த உக்ரைன் தாக்கப்பட்டதால், சரியாக உணவு தானிய விநியோகம் நடைபெறாமல், பல நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.