இரவோடு இரவாக உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்!

இரவோடு இரவாக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக உக்ரைனின் விமானப்படை கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ஷாஹெட் ட்ரோன்களை அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கருங் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாகவும் குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடிசா பகுதியில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Related Posts