இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் 65 வயதான தாயும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த பெண்ணின் தாய், நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர், இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணின் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்த சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
தான் செய்த முறைப்பாட்டை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஏற்காமை மற்றும் தன்மீதான தாக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் தலைமையகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்று, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமான முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.