இரத்தினபுரியில் பெண் மீது பொலிஸ் தடியடி (வீடியோ இணைப்பு)

வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதி ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தடியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று வாரங்களுக்கு முன்பு மேற்படி பகுதியில் வைத்து பெண்கள் இருவர் சண்டையிட்டுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி. பெண்கள் இருவரையும் அமைதியாகும்படி கட்டளையிட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த பெண்ணொருவர் பொலிஸ் அதிகாரி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். கோபமடைந்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் கையில் வைத்திருந்த தடியால் பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.

இக்காட்சியை பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தன்னை வார்த்தை மற்றும் சைகை மொழி மூலம் துஷ்பிரயோகப்படுத்திய கூறி யுவதியொருவர் இளைஞன் ஒருவரை பலமாக தாக்கிய சம்பவம் அண்மையில் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

Related Posts