இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 80 பேர் காயம்

south-affireca-trainதென் ஆப்ரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 80 பேர் காயம் அடைந்தனர்.கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் நகரத்தின் அருகே உள்ள பேரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாரும் பலியாகவில்லை என்று மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழு செய்தி தொடர்பாளர் லுயாண்டா மஜிஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அக்குழுவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஸல் மீரிங் இதுபற்றி கூறுகையில், “இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள் யாரும் அபாயகரமான கட்டத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts