இரண்டு மாதங்களில் மரண தண்டனை உறுதி – ஜனாதிபதி

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வணிகர்களுக்கு இரண்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்தோடு மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட கூடாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றம் இழைத்தவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு வக்காளத்து வாங்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை ஒழுக்கமுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

Related Posts