இரண்டு பாடசாலைக்கு ஒரு ஆசிரியர்

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவுவதால் ஒரு ஆசிரியர் இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருவதாக, வலிகாமம் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

santheraj-educatiom

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சங்கீதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், ஊடகவியல், விவசாயம் போன்ற பாடங்களுக்கு, வலிகாமம் பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றன.

அத்துடன், வலிகாமம் கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தற்காலிக இணைப்பு பெற்று வன்னிப்பகுதியில் கடமையாற்றுவதற்கு இடமாற்றம் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை மேலும் நீடிக்கின்றது.

தேவைப்படும் ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்றால் அவர்களை தேவையான பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts