இரண்டு நியதிச் சட்டங்கள் முதலமைச்சரினால் முன்வைப்பு

vickneswaran-vicky-Cmவடமாகாண சபையின் நியதிச் சட்டங்களில் புதிதாக நிதிநியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் என்பன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே முதலமைச்சர் மேற்படி இரண்டு நியதிச் சட்டங்களையும் சபையில் முன்வைத்தார். அத்துடன் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்காத நிலையில் குறித்த நியதிச் சட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்தார்.

அத்துடன், முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், அது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் இரண்டு அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படும் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts