இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள் இருவரும் இந்திய சுங்க திணைக்களத்தின் உளவுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரும் தமது பாதங்களுக்கிடையில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்துள்ளனர்.

200 கிராமுடைய தங்கக் கட்டிகள் 04, இந்திய சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts