இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்

ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது.

அந்த வரிசையில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பாலிவுட் ஹீரோயினை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடிப்பில் உருவாகவிருக்கும் அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருக்கிறார். தனுஷ் தனது வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

Related Posts