இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து அபார வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக குலசேகர 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக கப்டில் 93 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றது.

Related Posts