இரண்டாவது நாளாகவும் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நடை பயணம் இன்று வெள்ளிக்கிழமை இடண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

naday-payanam-2nd-day

கிளிநொச்சியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இரண்டாம் நாள் பயணத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் உள்நாட்டு விசாரணை விரும்பவில்லை, சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நடை பயணம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவை நோக்கியதாக இடம்பெறும் நடைபயணம் இரண்டாம் நாளாகிய இன்றும் இடம்பெற்றுவருகின்றது.

நடைபயணத்திற்கு வலுக்சேர்க்கும் விதமாக முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை பறி கொடுத்தவர்களும், காணாமல் போனவர்களின் உறவினர்களும் இதில் பங்கெடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts