இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில் இருந்து விலகியோர் மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளைக் கற்க விரும்புவோரும் கற்கமுடிவதுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவராக இருக்கவேண்டும்.

அடிப்படைக் கற்கைநெறிச் சான்றிதழ் மூன்று மாதங்களைக் கொண்டதாகவும் டிப்ளோமா கற்கைநெறி ஒரு வருடத்தைக் கொண்டதாகவும் இருப்பதுடன் வாராந்தம் எட்டு மணித்தியால வகுப்புகள், வார இறுதி மற்றும் வார நாட்களில் நடைபெறுவதுடன் வகுப்புக்கள் யாவும் கல்வியங்காட்டிலுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தில் நடைபெறவுள்ளன.

இக்கற்கை நெறியைத் தொடரவிரும்புவோர் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன் விண்ணப்பத்தைப் பெற்று பூரணப்படுத்தி பணிப்பாளர், மும்மொழிக் கற்கை நிலையம், ஜி.பி.எஸ். வீதி, கல்வியங்காடு என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரடியாகச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts