இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 9இல் ஆரம்பம்!!

அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஒக்டோபர் 9ஆம் திகதி மூடப்பட்டு நவம்பர் 16ஆம் திகதிவரை மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 11, 12 மற்றும் 13 தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் வகையில் பாடசாலைகள் இடம்பெறும்.

ஏனைய தரங்களுக்காக வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 2020ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Posts