இரண்டாம் சுற்று ஆபத்துக்கு வாய்ப்புண்டு- சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர்.

அந்தவகையில் இலங்கை இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்தினை தவிர்க்கவேண்டுமென்றால், உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் இலங்கை வைரஸ் பரவுதலை ஆரம்பகட்டத்திலேயே முறியடித்துவிட்டது எனினும் எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து தலைதூக்கலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts