இரணைமாதா நகர் போராட்டத்தில் 5வது நாளாக த,தே.ம.முன்னணி பங்கேற்பு

இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

5வது நாளான நேற்ற முன்னெடுக்கப்படும் மேற்படி போராட்டத்தில் தமிழ்த் தேசிய மகக்ள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இராணைமாதா நகர் சென்று அம்மக்களின் போராட்டத்துடன் இணைந்திருந்தார்.

6வது நாளாக இன்றும் அம்மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

Related Posts