இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடியை எட்டியுள்ளது.
31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலைமையைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடுக் குளம் 30 அடியை எட்டியுள்ளது.
31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டால், மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளும், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினாலும், இடர் முகாமைத்துவப் பிரிவினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.