இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு!

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Related Posts