இரணைதீவை விடுவிக்க கோரி ஏ-32 வீதியில் மறியல் போராட்டம்

பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து முழங்காவில் பகுதியில் வாழந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தம்மை, தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக அந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் இதுவரை இவர்களது கோரிக்கைகளுக்கு எவரும் பதில் வழங்காத நிலையில் குறித்த மக்கள் கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பின் புலத்திலேயே குறித்த மக்கள் இன்றைய தினம் ஏ-32 வீதியை மறித்து கவனயீர்ப்புப போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

Related Posts