இரணைதீவு மக்களுக்கு உதவி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை கடற்படையினரால் 1992 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பியுள்ள போதிலும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அம் மக்களுக்கு தேவையான தற்காலிக கூடார கொட்டகைகளை அமைத்து கொடுக்கும் நோக்கில் கிடுகுகள் மற்றும் தென்னை ஓலைகளை, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கி வைத்தார்.

குறித்த பகுதிக்கு சென்று அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடிய அவர், 3 மணியளவில் இராணி மாதா நகர் பகுதியில் மக்களிடம் இதனை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவங்களின் உதவியுடன் 5000 கிடுகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடுகுகள் பின்னத் தேவையான ஓலைகளும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts