இரட்டைக் குழந்தைகளுடன் சென்று தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனை!

அண்மையில் பிரசவித்த தனது இரட்டைக் குழந்தைகளுடன் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு சென்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இலங்கை வீராங்கனை.

உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனைதெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்நிலையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வீரர்கள் குஹாத்திக்கு புறப்பட தயாராக இருந்த வேளையிலும் அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு விசா கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் விளையாட்டமைச்சின் தலையீட்டின் பின்னர் அவரது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருக்கு இந்தியா செல்வதற்கு விசா கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

women-twins-baby-sports-2

women-twins-baby-sports-1

Related Posts