பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கையில் தங்கியிருந்த குறுகிய காலத்தில் இரசாயனப் பொருட்கள் கலவையற்ற தீவனத்தை உட்கொண்ட கோழிகள் இட்டு முட்டைகளை மட்டுமே உணவுக்காக எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
இரசாயனப் பொருட்கள் கலக்காத தீவனங்களை கோழிகளுக்கு வழங்கும் கோழிப் பண்ணை ஒன்று பெந்தோட்டை பகுதியில் இயங்கி வருகிறது. அங்கிருந்தே இந்த முட்டைகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் பசளை கீரையுடன் சமைக்கப்பட்ட பாரை மீன் உணவை அவர் மகிழ்ச்சியுடன் உட்கொண்டுள்ளார்.
அத்துடன் உணவுக்கு பின்னர் உண்ணும் பழமாக அவர் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தையே அவர் விரும்பி உட்கொண்டதாக கூறப்படுகிறது.