இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு! – எக்னெலிகொடவின் மனைவியும் பங்கேற்பு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

un-unchcr-meetin-unhcr

இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொண்ட காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவரை தேடித்தறுமாரு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.

Related Posts