இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர், பெரிய விஞ்ஞானி அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts