வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்ற அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்;கை பேரனனர்த்தத்தில் சிக்குண்டு நேற்றுவரை 206 பேர் உயிரிழந்ததுடன், 92 பேர்வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் வகையில் பாதுகாப்பு படையினரால் தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.