விஜய் படம் ஹாலிவுட் காப்பியா?

இயக்குனர் விஜய் விக்ரம் பிரபுவை வைத்து இது என்ன மாயம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் 2006 -இல் வெளியான த இல்லூஷனிஸ்ட் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது.

vijay

விஜய் இயக்கும் படங்கள் அனைத்தும் காப்பி சர்ச்சையில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. அவரது முதல் படம் கிரீடம், மலையாள கிரீடம் படத்தின் ரீமேக். இரண்டாவது படமான பொய் சொல்லப் போறோம் இந்திப் படத்தின் தழுவல். தெய்வத்திருமகள் ஐ யம் சாமின் காப்பி. மதராசப்பட்டணம் டைட்டானிக் உள்ளிட்ட சில படங்கள். தலைவா சர்க்காரின் உல்டா. தாண்டவம் உதவி இயக்குனரின் கதை.

இது என்ன மாயம் படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன், ராதிகா சரத்குமார், சரத்குமார் கூட்டாக இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் தயாரிப்பில் வெளியான புலிவால் திரைப்படம் ஹாங்காங் படமான ஹேண்ட்போனின் காப்பி. ராதிகா சரத்குமாரின் ராடன் தயாரித்த ஜக்குபாய் பிரெஞ்ச் வசாபி படத்தின் காப்பி.

இந்த பின்னணி காரணமாக இது என்ன மாயம் படமும் ஹாலிவுட் காப்பி என்ற பேச்சு எழுந்திருப்பது மிக இயல்பானதே. படம் விஜய்யின் சொந்த கதையா இல்லை காப்பியா என்பது படம் வந்ததும் தெரிந்துவிடும்.

Related Posts