இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!

379595_10152915794790198_1284523729_nதமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று நெசப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் திடீரென மாரடைப்பால் காலமானார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மணிவண்ணன் 400க்கும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர்.

இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார்.

தன் நண்பர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி, மிகப்பெரிய நடிகராகவும் வலம் வந்தவர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, ’கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கான தனி ஒரு இடத்தைப் பிடித்தவர்.

சமீபத்தில் இவர் இயக்கிய படமான ’நாகராஜசோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ’, (அமைதிப்படை- 2) வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இறந்த பின்பு தனது உடலுக்கு புலிக்கொடியை போர்த்தவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts